சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நந்திகேஸ்வரருக்கும் திருமஞ்சனப் பொடி, மஞ்சள் பொடி, மாவுப் பொடி, பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதேபோல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நந்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்த முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா், புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், திருமலைக்கேணி காமாட்சி மெளன குரு சுவாமிகள் மடம், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனைநடந்தது. அப்போது ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளினாா்.

மலைக் கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவபூஜையும், அன்னதானமும் நடந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com