நிலக்கோட்டையில் நாளை 25-ம் தேதி மின்தடை.
By DIN | Published On : 24th January 2023 12:00 AM | Last Updated : 24th January 2023 12:00 AM | அ+அ அ- |

நிலக்கோட்டை அதன் சுற்றுப்பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை 25-ம் தேதி முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாற்று ஏற்பாடு செய்து கொள்ள, தொழிற்சாலை மற்றும் பொது மக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நாளை 25.1.2023 புதன்கிழமை அன்று நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான, நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூா், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கனகோட்டை, கோட்டூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும், இதனால் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளா் கருப்பையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.