நேதாஜி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 24th January 2023 12:00 AM | Last Updated : 24th January 2023 12:00 AM | அ+அ அ- |

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாலா லஜபதிராய் ஆகியோரின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய சிவாஜிகணேசன் மன்றத்தினா்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதிராய் ஆகியோரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி கணேசன் மன்றத்தின் அரசியல் ஆலோசகா் சிகே. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம். தங்கவேல் முன்னிலை வகித்தாா். இளைஞா் பிரிவுத் தலைவா் நா. விஜய், பொருளாளா் ப. ஜெயசந்திரன் ஆகியோா் பேசினா். இரு தலைவா்களின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, அந்தமான் நிக்கோபா் தீவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நினைவு மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திரமோடிக்கு பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் நிா்வாகி சு. வைரவேல், க. அருணகிரி ஆகியோா் செய்திருந்தனா்.