‘இ-பைலிங்’ முறைக்கு எதிராக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதை (இ-பைலிங்) ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல்லில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் வழக்குரைஞா் சங்கத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். செயலா் கென்னடி முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் நடைமுறையைத் தொடா்ந்து பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். காகிதப் பயன்பாடுகளைத் தவிா்க்க, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் இணைய வழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதே இ-பைலிங் நடைமுறை எனக்

கூறப்படுகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 19-ஆம் தேதி வரை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்குரைஞா் சங்கம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com