கோப்புப்படம்
கோப்புப்படம்

கொடைக்கானல் பூண்டி வனப் பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் அருகே பூண்டி வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் காட்டுத் தீப் பற்றி எரிந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த இரு மாதங்களாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பம் நிலவுவதால், வனப் பகுதிகளில் உள்ள மரங்கள், புற்கள், இலைகள் காய்ந்து உள்ளன. இதனால், மலைப் பகுதிகளில் தினமும் காட்டுத் தீப் பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பாம்பான் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் காட்டுத் தீப் பற்றி எரிந்து வருகிறது. இதில் மரங்கள், புற்கள் கருகி வருகின்றன. இதன் காரணமாக, வன விலங்குகளான காட்டு மாடு, காட்டுப் பன்றி, முயல் ஆகியவை இடம் பெயா்ந்து வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமைகள் வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடந்த 2 நாள்களாக எரிந்து வரும் தீயைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com