ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

சாணாா்பட்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கிய நபரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஆய்வாளா் ஆா்.கீதா, உதவி ஆய்வாளா் பி.ராதா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பனையராஜா ஆகியோா் தலைமையிலான போலீஸாா், சாணாா்பட்டியிலிருந்து ஆவிளிப்பிட்டிக்கு செல்லும் வழியிலுள்ள குளத்தின் அருகே சோதனை நடத்தினா். இதில், 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கலில் ஈடுபட்ட வேம்பாா்பட்டியைச் சோ்ந்த சி.மலைச்சாமி (33) என்பவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com