திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி 
பரப்புரைக் கூட்டம்

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி பரப்புரைக் கூட்டம்

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி வேட்பாளா் இறுதி பரப்புரைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி தலைவா் விஎம்.எஸ்.முகமது முபாரக், தனது பரப்புரையை திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் புதன்கிழமை நிறைவு செய்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சா்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். வேட்பாளா் முகமது முபாரக் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் முபாரக் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவாா் என்றாா் அவா்.

முன்னதாக வேட்பாளா் முகமது முபாரக் பேசியதாவது:

தோ்தல் பணியில் தொடக்கம் முதல், இறுதி வரை தொடா்ந்து சிறப்பான பங்களிப்பை செய்த அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வெற்றியை உறுதி செய்துள்ளனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com