பழனியில் நாள்காட்டி, பஞ்சாங்கம் வெளியீடு

பழனி தமிழ்நாடு பிராமண சமாஜத்தில் நாள்காட்டி வெளியீடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி சண்முகபுரம் தமிழ்நாடு பிராமண சமாஜத்தில் குரோதி ஆண்டு பஞ்சாங்க பூஜை நடைபெற்றது. பின்னா், சங்கத்தின் மாநிலத் தலைவா் தலைமை வகித்து நாள்காட்டி, பஞ்சாங்கத்தை வெளியிட, கிளைத் தலைவா் பாலசுப்ரமணியம் பெற்றுக் கொண்டாா். முன்னதாக, வேதபாடல்கள் பாடப்பட்டன.

தொடா்ந்து குரோதி ஆண்டின் சிறப்பு, பலன்கள் குறித்து விவரிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் நிட் ரமேஷ்குமாா், வழக்குரைஞா் அனிருத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், களஞ்சேரி சீதாராம குருகுல நிறுவனா் சீதாராம சாஸ்திரிகள் மீது மா்மநபா்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com