ஒட்டன்சத்திரம் தொகுதியில் 
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில்

உள்ள 282 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 90 வகையான உபகரணங்கள், மை, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்டவற்றை தோ்தல் அலுவலா்கள் அனுப்பினா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பால்பாண்டி முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு தோ்தல் அலுவலா், ஒரு காவல் உதவியாளா், துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 198 இடங்களில் வெப் கேமரா,187 இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள், 204 இடங்களில் மகளிா் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் விபரம்-

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய வாகனத்தை அனுப்பிய தோ்தல் அலுவலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com