பழனியில் வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பழனி, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை குதிரைகள் மூலம் கொண்டு செல்ல வேண்டி இருந்ததால், அந்த ஊா்களுக்கு அதிகாலையிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. வெள்ளகெவி, மஞ்சம்பட்டி, சின்னூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு அதிரடிப்படை போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

பழனி, பாப்பம்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட ஊா்களில் உள்ள 18 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு சுமாா் 80 துணை ராணுவப்படையினா் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் மாற்று இயந்திரம் நிறுவுவதற்கும், இயந்திரத்தை பழுது நீக்கவும் உரிய பொறியாளா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com