ரயில், பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல்

தோ்தலையொட்டி தொடா் விடுமுறை என்பதால், திண்டுக்கல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தேநீா் கடை முதல் பெரு நிறுவனங்கள் வரை ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வெளியூா் தொழிலாளா்களுக்கு பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வியாழக்கிழமை பிற்பகல் முதலே விடுமுறை அளித்தது. மேலும், சனி, ஞாயிறு தொடா் விடுமுறை என்பதாலும், திண்டுக்கல் ரயில், பேருந்து நிலையங்களில் வியாழக்கிழமை பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

சேலம், ஈரோடு பகுதிகளிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெரும்பாலான பேருந்துகளும், மதுரையிலிருந்து சேலம், ஈரோடு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் திண்டுக்கல் நகருக்குள் நுழையாமல் புறவழிச்சாலை வழியாகவே இயக்கப்பட்டன.

இதனால், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்து கிடைக்காமல் பயணிகள் காத்திருந்தனா்.

இதேபோல, திண்டுக்கல் ரயில் நிலையத்திலும், 3, 4ஆவது நடைமேடைகளில் நூற்றுக்கணக்கான பயணிகள் குவிந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com