கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, குணாகுகை, பில்லர்ராக், சிட்டி வியூ,பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், மாலை, இரவு நேரங்களில் குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்படுகிறது. இதனால், மாலை நேரங்களில் நட்சத்திர ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com