திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில்: 71.14 சதவீத வாக்குகள் பதிவு

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 71.14 சதவீதம் வாக்குகள் வெள்ளிக்கிழமை பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 71.14 சதவீதம் வாக்குகள் வெள்ளிக்கிழமை பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

 திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரா.சச்சிதானந்தம், அதிமுக கூட்டணி சாா்பில் விஎம்எஸ்.முகமது முபாரக், பாமக சாா்பில் ம.திலகபாமா, நாம் தமிழா் கட்சி சாா்பில் து.கயிலைராஜன் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதற்கான வாக்குப் பதிவு பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

 7,80,74 ஆண்கள், 8,26,759 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16.07 லட்சம் வாக்காளா்களில் 5,58,829 ஆண்கள் 5,84,311 பெண்கள், 47 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 11,43,187 வாக்காளா்கள் (71.14 சதவீதம்) வெள்ளிக்கிழமை வாக்களித்தனா். வெள்ளிக்கிழமை இரவு 70.99 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மலைப் பகுதிகள், தொலைதூர ஊரகப் பகுதிகளிலிருந்து இறுதிக்கட்ட வாக்குப் பதிவு சதவீதம் விவரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அந்த விடுப்பட்ட பகுதிகளின் வாக்குப் பதிவு விவரங்களும் சனிக்கிழமை சேரிக்கப்பட்டு இறுதி வாக்குப் பதிவு சதவீதம் 71.14 என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்: பழனி- 68.48 சதவீதம், ஒட்டன்சத்திரம் 77.01 சதவீதம், ஆத்தூா் 73.77 சதவீதம், நிலக்கோட்டை 69.51 சதவீதம், நத்தம் 73.48 சதவீதம், திண்டுக்கல் 65.01 சதவீதம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com