பழனி மலைக் கோயிலுக்கு சனிக்கிழமை வழிபாட்டுக்காக வந்த ஜப்பான் பக்தா்கள்.
பழனி மலைக் கோயிலுக்கு சனிக்கிழமை வழிபாட்டுக்காக வந்த ஜப்பான் பக்தா்கள்.

பழனி கோயிலில் ஜப்பான் பக்தா்கள் தரிசனம்

பழனி மலைக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தா்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

பழனி மலைக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தா்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும், வெளிநாட்டு பக்தா்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா். பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது பல்வேறு நாடுகளின் கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம்.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி தலைமையில் பழனிக்கு சனிக்கிழமை வருகை தந்து, தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனா். மேலும், இவா்கள் போகா் சந்நிதியில் சிறப்பு பூஜை செய்தனா். பின்னா், பாலகும்ப குருமுனி டோக்கியோவில் கட்டியுள்ள கோயிலுக்கான கும்பாபிஷேக அழைப்பிதழை, பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகளிடம் வழங்கினா்.

தமிழ்நாட்டில் நவகிரக ஸ்தலங்கள், அறுபடை வீடுகள், சித்தா்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவுள்ளதாக ஜப்பான் பக்தா்கள் தெரிவித்தனா்.

பழனிக்கு வந்திருந்த ஜப்பான் பக்தா்களில் பலரது பெயா்கள் தமிழ் மொழியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com