வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 74.42 சதவீத வாக்குகள் பதிவு

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 74.42 சதவீத வாக்குகள் பதிவாகின.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 74.42 சதவீத வாக்குகள் பதிவாகின.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. வேடசந்தூா் தொகுதியில் 1,31,961 ஆண்கள், 1,38,399 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 2,70,363 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவில், 97,977 ஆண்கள், 1,03,226 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,01,204 போ் மட்டுமே (74.42 சதவீதம்) வாக்களித்தனா்.

இதன் மூலம் கரூா் மக்களவைத் தொகுதியில் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில்தான் குறைந்தளவு வாக்குகள் பதிவாகின. கரூா் மக்களவைத் தொகுதியில் பிற சட்டப்பேரவைத் தொகுதிகளான அரவக்குறிச்சியில் 78.84 சதவீதமும், கரூரில் 80.91 சதவீதமும், கிருஷ்ணராயபுரத்தில் 82.66 சதவீதமும், மணப்பாறையில் 75.97 சதவீதமும், விராலிமலையில் 80.49 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com