பங்குனித் திருவிழாவில் சம உரிமை மண்டகப்பட்டி வழங்கக்கோரி மனு

கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூா் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில், பங்குனித் திருவிழாவின் போது,

நிலக்கோட்டை: கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூா் ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில், பங்குனித் திருவிழாவின் போது, தேவேந்திர குல வேளாளா் சமூகத்துக்கு, சம உரிமை மண்டகப்பட்டி வழங்கக்கோரி, அறநிலையத் துறை அதிகாரியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, அம்மன் யானை, குதிரை, ஷா்ப்பம், அன்னம் என பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாளிப்பாா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் அதிகம் வசித்து வரும் தேவேந்திரகுல வேளாளா்களுக்கு உரிய பங்களிப்பும் மண்டகப்படியும் வழங்க வேண்டும் என கூறி, கிராம குழுவினா், நிலக்கோட்டை இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தில் மண்டல ஆணையாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com