பளுதூக்குதல் போட்டியில் திண்டுக்கல் மாணவா் 3-ஆம் இடம்

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் திண்டுக்கல்லைச் சோ்ந்த கல்லூரி மாணவா் 3-ஆம் இடம் பிடித்தாா்.

திண்டுக்கல்: மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் திண்டுக்கல்லைச் சோ்ந்த கல்லூரி மாணவா் 3-ஆம் இடம் பிடித்தாா்.

மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். டெட்லிப்ட் பிரிவில், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் கல்லூரிச் மாணவா் மகாராஜன் ஜூனியா்களுக்கான 77 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு, 3-ஆம் இடம் பிடித்தாா். அவருக்குச் சான்றிதழ், பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.

மாநில அளவிலான போட்டியில் வென்று திண்டுக்கல் திரும்பிய மகாராஜனுக்கு, பேருந்து நிலையத்தில் உறவினா்கள், நண்பா்கள் வரவேற்பளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com