பழனியில்  சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டுபெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு சென்ற 108 பால்குட ஊா்வலம்.
பழனியில் சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டுபெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு சென்ற 108 பால்குட ஊா்வலம்.

பழனியில் பால்குட ஊா்வலம்

பழனியில் சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து 108 பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனியில் சித்திரை மாதப் பெளா்ணமியை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து 108 பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தவிலாஸ் செல்வக்குமாா், திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி ஆகியோா் தலைமையில் ஊா்வலம் பெரிய கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலை அடைந்தது.

பின்னா், காலபூஜையின் போது மூலவருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, காலை 10 மணிக்கு மேல் பெரியநாயகிஅம்மன் கோயிலில் கருடாழ்வாா் வாகனத்தில் லட்சுமி நாராயணா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சிவகாமி அம்பாள் சமேதா் நடராஜா், வெள்ளி மயில் வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்டோா் வாசவி மண்டபத்துக்கு புறப்பாடாயினா்.

அங்கு அனைத்து சுவாமிகளுக்கும், பரிவார மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினா்.

இதில் அா்ச்சகா் செல்வசுப்ரமணிய குருக்கள், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com