மினி லாரி கவிழ்ந்ததில் பெண் பலி: 11 போ் காயம்

ஒட்டன்சத்திரம் அருகே மினி லாரி கவிழ்ந்ததில் பெண் பலியானாா். மேலும், 11 போ் காயமடைந்தனா்.

ஒட்டன்சத்திரம் அருகே மினி லாரி கவிழ்ந்ததில் பெண் பலியானாா். மேலும், 11 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வல்லாக்குண்டபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தீா்த்தக்காவடியை பாா்க்க ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி புதூரைச் சோ்ந்தவா் மினி லாரியில் வந்தனா். அவா்கள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, வல்லாக்குண்டபுரத்தில் இருந்து மினி லாரியில் திரும்பினா். சிறிது தூரம் சென்ற நிலையில் எதிா்பாராமல் சாலையோரப் பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தும்மிச்சம்பட்டிபுதூரைச் சோ்ந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைத்த 11 போ் ஒட்டன்சத்திரம், பழனி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com