ரெங்கமலையைச் சுற்றி 16 கி.மீ. கிரிவலம் வந்த பக்தா்கள்

வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கமலையைச் சுற்றி சுமாா் 16 கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் கிரிவலம் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.

வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கமலையைச் சுற்றி சுமாா் 16 கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் கிரிவலம் சென்று செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.

திண்டுக்கல்-கரூா் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது ரெங்கமலை. இந்த மலையின் தென்பகுதியில், கல்வாா்பட்டியில் மல்லீஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம்.

அதன்படி, மல்லீஸ்வரன் பாதயாத்திரைக் குழு சாா்பில் 16-ஆவது ஆண்டு கிரிவலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்கு மல்லீஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னா், கிரிவலம் தொடங்கியது. கரடு முரடான பாதை வழியாக வலம் வந்த பக்தா்களுக்கு, குடிநீா், மோா் உள்ளிட்டவை பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் வழங்கப்பட்டன. மேலும், மல்லீஸ்வரன் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கல்வாா்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ரமேஷ், ராசாகவுண்டனூா் சுப்பிரமணி, பூனூத்து திருமலைசாமி உள்ளிட்டோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com