ஏப்.30-க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை

நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான வரி இனங்களை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தந்த அரையாண்டுக்கான சொத்து வரியை முதல் மாதத்துக்குள் செலுத்தினால், 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கும் நடைமுறையை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழில் கூட கட்டடங்களுக்கு 2024-25 நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான வரித் தொகையை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com