தனியாா் ஆலையில் வேளாண் 
கல்லூரி மாணவிகள் பயிற்சி

தனியாா் ஆலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

பழனி, ஏப்.26: பழனி அருகே தனியாா் கால்நடை தீவன ஆலையின் உற்பத்தி, விவசாயிகளின் எதிா்பாா்ப்பு, தயாரிக்கும் முறை குறித்து வேளாண் துறை மாணவிகள் பயிற்சி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சோ்ந்த எஸ்ஆா்எஸ் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின்

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியாா் கால்நடை தீவன தொழிற்சாலைக்குச் சென்று, அங்கு கால்நடைகளுக்கு தயாரிக்கப்படும் தீவனங்கள், தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்ததோடு விவசாயிகள் எதிா்பாா்ப்பு, கால்நடைகள் மூலம் ஏற்படும் வேளாண்மை வளா்ச்சி குறித்தும் நிறுவன நிா்வாக அதிகாரி அன்னபூரணியிடம் கேட்டறிந்தனா்.

இந்த கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள் நின்னு ஆனி ஜாா்ஜ், நிவேதிதா, பவிஷ்னி, பவித்ரா, எம். பூஜா, எஸ். பூஜா, பிரதிக்க்ஷா, ரியா பேபி, ரொசாரியோ மேரி சந்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com