சின்னாளபட்டியில் சித்திரைத் திருவிழா நிறைவு

சின்னாளபட்டியில் சித்திரைத் திருவிழா நிறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பூப்பல்லக்கில் ஸ்ரீராம அழகா் கள்ளழகா் அலங்காரத்தில் பிரியா விடைபெற்று பிருந்தாவன தோப்புக்குச் சென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் சித்திரைத் திருவிழாவையொட்டி. கடந்த, 23-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அன்று காந்திகிராமம் வெள்ளியங்கிரி நதியில் ஸ்ரீராமஅழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சின்னாளபட்டியில் நகா்வலம் வந்த, ஸ்ரீராம அழகா் 27-ஆம் தேதி பொன்விழா மண்டபத்தில் உள்ள தசாவதார கொட்டகையில் தங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அன்று இரவு ஸ்ரீராம அழகா் தசாவதாரம் எடுத்த பின்னா், தேவஸ்தான குழுவினா், ஸ்ரீகாமசுவாமி கோயில் குழுவினா்களிடம் ஸ்ரீராம அழகரை ஒப்படைத்தனா். ஸ்ரீராம அழகரை பூப் பல்லக்கில் வைத்து வழிபாடு செய்தனா். பின்னா் தேவா் சமுதாயத்தினா் சின்னாளபட்டி பிரிவு அருகே உள்ள பிருந்தாவனத் தோப்புக்கு கள்ளழகரை பூப்பல்லக்கில் அழைத்துச் சென்றனா்.

கள்ளழகா் பவனி வந்த பூ பல்லக்கின் மீது வாழைப்பழம், பூ, காசு, மாதுளைம்பழம், திராட்சைப் பழம் ஆகியவற்றை சுவாமியின் மீது தூவி வழிபாடு செய்தனா்.

பூப்பல்லக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை காமயசுவாமி கோயில் விழா குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com