பழனியில் ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (ஏப்.29) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக்கோயில் உச்சிக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோப்காா் பக்தா்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் சேவை, பிற்பகல் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை ஒருநாள் நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com