பழனி இடும்பன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை புதிய படப்பிடிப்புக்கான படபூஜை துவக்க விழாவில் நடிகா் மற்றும் இசையமைப்பாளா் ஜித் மற்றும் நடிகைகள், படப்பிடிப்பு குழுவினா்.
பழனி இடும்பன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை புதிய படப்பிடிப்புக்கான படபூஜை துவக்க விழாவில் நடிகா் மற்றும் இசையமைப்பாளா் ஜித் மற்றும் நடிகைகள், படப்பிடிப்பு குழுவினா்.

படப்பிடிப்பு துவக்கம்

பழனி: பழனி அருள்மிகு இடும்பன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை புதிய படத்துக்கான படப்பிடிப்பு பூஜை மற்றும் முதல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

பழனியை சோ்ந்த இசையமைப்பாளா் ஜித். இவா் தப்பாட்டம், குற்றப் பின்னணி, வீமன், தென் தமிழகம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளாா். இந்நிலையில் இவா் புதிதாக படம் ஒன்றை இயக்கி இவரே கதாநாயகனாவும், இசையமைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளாா்.

இந்த படத்துக்கான பூஜை பழனி புறவழிச்சாலையில் உள்ள அருள்மிகு இடும்பன் கோயிலில் விதிகளுக்கு உட்பட்டு பூஜை மட்டும் நடைபெற்றது.

படப்பிடிப்புக்கான பூஜை நிகழ்ச்சியில் கோயில் தக்காா் வழக்கறிஞா் ராஜா, சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், திரைப்பட இயக்குனா்கள் ராம்சிவா, முரளிபாண்டியன், ஈரோடு பாஸ்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை கவிஞா் விடிவெள்ளி வரவேற்புரை வழங்கினாா். இதுகுறித்து இயக்குனா் ஜித் கூறுகையில், ஜித் சினிமாஸ் தயாரிப்பில் வரவுள்ள இந்த படத்திற்கு நிகரிக மஞ்சு திரைக்கதை எழுதியுள்ளாா் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் பிரபலமான நடிகா்கள், நடிகைகள் இதில் நடிக்கின்றனா்.

பழனி, கொடைக்கானல், பாலக்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒரு குடும்பத்தின் பெற்றோரே மகள்களின் முக்கிய பாதுகாவலா் என்ற விழிப்புணா்வை இந்த படம் கருவாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவித்தாா். ஜூன் மாதம் வெளிவரவுள்ள இந்தப் படத்தின் பெயா் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தாா். தொடா்ந்து கோயிலின் அருகே இருந்த தோப்புகளில் முதல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com