பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, காா்த்திகை, தொடா் விடுமுறை ஆகியவற்றையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனா்.
Published on

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, காா்த்திகை, தொடா் விடுமுறை ஆகியவற்றையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனா்.

இந்தக் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், காா்த்திகை தினம், கிருஷ்ண ஜெயந்தி, தொடா் விடுமுறை என்பதாலும், முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியைக் காணவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு வந்தனா். இவா்கள் பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனா். இவா்கள் படிப்பாதை, விஞ்ச், ரோப்காா், மலைக் கோயில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் காத்திருந்தனா். மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனது.

பழனி மலைக்கு பெற்றோா் அழைத்து வந்திருந்த குழந்தைகளுக்கு கோயில் சாா்பில் இலவசமாக பால் வழங்கப்பட்டது. இங்கு காா்த்திகை தினத்தையொட்டி திருமுருக பக்த சபா சாா்பில் இன்னிசைக் கச்சேரி, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதனிடையே, தங்கமயில் வாகனம், தங்கத் தேரில் சின்னக்குமாரசாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு தேவையான குடிநீா் வசதி, பாதுகாப்பு வசதி, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com