போக்சோ வழக்குகளில் 2 பேருக்கு ஆயுள் சிறை

Published on

இரு வேறு போக்சோ வழக்குகளில் இரு இளைஞா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (33). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மகேந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் மகேந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.

மற்றொரு வழக்கு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரபாண்டி (24). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குபேந்திரபாண்டியனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குபேந்திரபாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.1.05 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com