திண்டுக்கல்
வழக்குரைஞா்கள் மனித சங்கிலி போராட்டம்
பழனியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கடந்த மாதம் புதியதாக மூன்று சட்டங்களை இயற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் அங்குராஜ் தலைமை வகித்தாா். செயலா் கலைஎழில்வாணன், பொருளாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் இதில் பங்கேற்றனா்.
பின்னா், தன்னிச்சையாக மூன்று சட்டங்களை இயற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா்.