தலைமைக் காவலரை தாக்கி சங்கிலி பறிப்பு: இருவா் கைது

திண்டுக்கல்லில் தலைமைக் காவலரைத் தாக்கி 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திண்டுக்கல்லில் தலைமைக் காவலரைத் தாக்கி 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் சதீஷ்குமாா் (35). இவா், திண்டுக்கல் அடுத்த நல்லாம்பட்டியிலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றாா். அப்போது, சதீஷ்குமாரை வழிமறித்த இரு இளைஞா்கள், அவரை தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமாா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், சதீஷ்குமாரை தாக்கி சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது நல்லாம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த ராகவேந்திரா (25), அரவிந்த் (21) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com