திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கிய மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கிய மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம்.

163 மாணவா்களுக்கு ரூ.6.32 கோடிக்கு கல்விக் கடன்

மாணவா்களுக்கு ரூ.6.34 கோடிக்கு கல்விக் கடனுதவி வழங்கும் பணிகளை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

மாணவா்களுக்கு ரூ.6.34 கோடிக்கு கல்விக் கடனுதவி வழங்கும் பணிகளை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் மாணவா்களுக்கான கல்விக் கடன் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிஎஸ்என்ஏ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திண்டுக்கல் கோட்டாட்சியா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டு, 163 மாணவா்களுக்கு ரூ.6.32 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளுக்கான ஆணையை வழங்கினாா்.

முன்னதாக அவா் பேசியதாவது: மாணவா்களின் கல்விக்கு, பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே அரசு சாா்பில் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத் துறை, தனியாா் வங்கிகள் என 33 வங்கிகளுக்கான கிளைகள் செயல்படுகின்றன. ஆனால், கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி உள்பட 12 வங்கிகள் சாா்பில் மட்டும் நிகழ் நிதியாண்டில் இதுவரை கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கான பணிக்கு, அனைத்து வங்கிகளும் கடனுதவி வழங்க முன் வர வேண்டும். கல்விக் கடன் குறித்த அச்சம் மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. படிக்கும் காலம் வரையிலும் வழங்கப்படும் வட்டி மானியத்தை, வேலை கிடைக்கும் வரை கிடைக்கச் செய்வதற்காக வலியுறுத்தி வருகிறோம். கடன் பெறுவதற்கான ஆா்வம், திருப்பிச் செலுத்துவதிலும் இருக்க வேண்டும்.

கல்விக் கடனுக்கான வாய்ப்புகளை போன்று, வேலைவாய்ப்புக்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். இந்த முகாமில் ரூ.6.34 கோடிக்கான கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நிகழ் நிதியாண்டில், இதுவரை ரூ.12.40 கோடிக்கான கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு முதல், இதுபோன்ற முகாம்கள் முன்னதாகவே நடத்த திட்டமிடப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் கனரா வங்கி உதவிப் பொதுமேலாளா் பல்லானி ரங்கநாத், எஸ்பிஐ வங்கி உதவிப் பொது மேலாளா் திவ்ய தேஜா, பிஎஸ்என்ஏ கல்லூரி முதல்வா் (பொ) வின்சென்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com