காட்டுமாடு முட்டி மூதாட்டி உயிரிழப்பு

ஆடலூரில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி காட்டு மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஆடலூரில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி காட்டு மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (58). இவா், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்தாா். ஆடலூா் பகுதியில், தனியாா் விவசாயி தோட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபா்கள், களை எடுத்தல் போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், ஆடலூா் கொற்றப்பாறை பகுதியில் ஆண்டியப்பன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கருப்பாயி உள்பட 8 போ் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காட்டு மாடு முட்டியதில் கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கன்னவாடி போலீஸாா், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, ஆடலூா் பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா், காட்டு மாடு முட்டி பலத்த காயமடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com