கோயில்களில் உண்டியலைஉடைத்து பணம் திருட்டு

கொடைக்கானல் அருகே உள்ள கோயில்களில் வியாழக்கிழமை உண்டியல்களை உடைத்து பணம் திருடிச் செல்லப்பட்டது.

கொடைக்கானல் அருகே உள்ள கோயில்களில் வியாழக்கிழமை உண்டியல்களை உடைத்து பணம் திருடிச் செல்லப்பட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு அருகே ஆலடிப்பட்டி பகுதியில் ஸ்ரீவெங்கடாச்சலபதி, விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் உள்ள 2 உண்டியல்களை மா்ம நபா்கள் உடைத்து இதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில்களின் நிா்வாகி பாலகிருஷ்ணன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com