காந்திகிராம பல்கலையில் மாா்ச் 9-இல் பட்டமளிப்பு விழா

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் 9-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், நேரில் பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் 9-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், நேரில் பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொ) எல்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா, மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. 2020-21, 2021-22, 2022-23 ஆகிய கல்வி ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவா்கள், நேரில் பட்டம் பெற விரும்பினால், பல்கலை. இணையதளத்தில் பிப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com