திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், நடைமேடைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை அமைக்கின்றனா். இதேபோல, பலா் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக குறிப்பிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து விடுகின்றனா். இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், நடப்பதற்குக்கூட இடமின்றி அவதியடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண் பயணி ஒருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். இதன் எதிரொலியாக , பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பாதைகளில் வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்பேரில், நகரமைப்பு அலுவலா் நாராயணன், உதவி நகரமைப்பு அலுவலா் வள்ளிராஜம், சுகாதார ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இனி பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்தமாட்டோம் என உறுதிமொழி அளித்துவிட்டு, அந்த வாகனங்களை உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை மீட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com