பெண் அடித்துக் கொலை: இளைஞா் தப்பியோட்டம்

நிலக்கோட்டை அருகே பெண்ணை உலக்கையால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெண் அடித்துக் கொலை: இளைஞா் தப்பியோட்டம்

நிலக்கோட்டை அருகே பெண்ணை உலக்கையால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சடையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முத்துவெள்ளையன். இவரது மனைவி தமிழரசி (45).

இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கருப்பையாவுக்கும் (35) இடையே, வீட்டுக் கழிவுநீா் செல்வது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தமிழரசி, கருப்பையா ஆகியோரிடையேய வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுறது.

இதனால், ஆத்திரமடைந்த கருப்பையா உலக்கையால் தமிழரசியைத் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த தமிழரசியை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு தமிழரசி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து விளாம்பட்டி காவல் ஆய்வாளா் ஷா்மிளா வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இளைஞரைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com