போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் நத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

போக்சோ வழக்கில் நத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் வீரக்குமாா்(29). இவா், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீரக்குமாரை கைது செய்தனா் இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், குற்றஞ்சாட்டப்பட்ட வீரக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com