திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை

 திண்டுக்கல் அருகே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

 திண்டுக்கல் அருகே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் ஒய்எம்ஆா். பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவரது மகன் ராஜகோபால் என்ற சப்ப கோபால் (25). கூலித் தொழிலாளியான இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியிலுள்ள சின்னக்குளத்துக்கு ராஜகோபால் சனிக்கிழமை சென்றாா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு ராஜகோபால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், திண்டுக்கல் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் ராஜகோபாலின் உடலைக் கைப்பற்றினா். மேலும் முன் விரோதத்தில் இவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com