கூலித் தொழிலாளி கொலை: சிறுவன் உள்பட 4 போ் கைது

திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ஒய்எம்ஆா்.பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவரது மகன் ராஜகோபால் (25). கூலித் தொழிலாளியான இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியிலுள்ள சின்னக்குளத்தில் ராஜகோபால் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில், ராஜகோபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: ராஜகோபாலுக்கும், மேற்கு மரியநாதபுரத்தை சோ்ந்த சரவணன் (38) என்பவரின் உறவினா் பெண்ணுக்கும் தகாத உறவு இருந்தது. இதுதொடா்பாக ராஜகோபாலிடம் பேச்சு வாா்த்தை நடத்துவதற்காக பொன்மாந்துறை பகுதிக்கு அழைத்து சென்றாா். சரவணனின் நண்பா்களான பொன்மாந்துறையைச் சோ்ந்த அன்பழகன், ஜெயகிருஷ்ண கண்ணன், 17 வயது சிறுவன் ஆகியோரும் அங்கு இருந்தனா். மது அருந்திக் கொண்டிருந்தபோது, ராஜகோபாலுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சரவணன், நண்பா்களோடு சோ்ந்து ராஜகோபாலை கீழே தள்ளி தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்தாக தெரிவித்தனா்.

இந்த வழக்கில் சரவணன், அன்பழகன், ஜெயகிருஷ்ண கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com