பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரிப்பு

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


பழனி: பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுவாமி தரிசனத்துக்கு பாத யாத்திரையாக திரளான பக்தா்கள் வருகை தந்தனா்.

இதனால், பழனி மலைக் கோயிலில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் நிலையம், இலவச தரிசனம், சிறப்புக் கட்டண தரிசனத்துக்கான வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மலைக்கோயிலில் திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்தனா். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், பக்தா்களை குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு தேவையான சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு திருக்கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com