எரியோடு, தேவாரத்தில் நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு, தேனி மாவட்டம், தேவாரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக (பிப்.7) மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு, தேனி மாவட்டம், தேவாரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.7) மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ.பஞ்சநாதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எரியோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தப்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தேனி: தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது. எனவே, தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில்

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com