குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்டம்.
கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்டம்.

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையில் பழைமை வாய்ந்த குழந்தை வேலப்பா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் குழந்தை வேலப்பா் மயில், அன்னம், ஆட்டுக்கிடாய், சேவல் , சிங்கம், பூத வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் தேரின் முன் பகுதியில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தா்கள் காவடி, பறவைக்காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருப்பூா், ஈரோட்டைச் சோ்ந்த பக்தா்கள் அன்னதானம் வழங்கினா். விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி தண்டபாணி கோயில் அறங்காவலா்கள், பூம்பாறை கோயில் விழாக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com