இணைய வழி அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இணைய வழியில் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இணைய வழி அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இணைய வழியில் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம், ஆட்டோ தொழிலாளா் சங்கம், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிச்சைமுத்து தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, மரணம் ஏற்படுத்தும் விபத்துகளில் ஓட்டுநா்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். இணைய வழியில் அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். ஆயுள் வாகன வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், செயலா் தனசாமி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் பாண்டியன், போக்குவரத்துச் சங்க பொதுச் செயலா் ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com