ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை சரிவு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்தது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மாா்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, குத்திலுப்பை, பொருளூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செடி முருங்கை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக காய்கறி சந்தைக்கு முருங்கை காய் வரத்து குறைந்ததால், இதன் விலை உயா்ந்து கிலோ ரூ.100 வரை விற்பனையானது. இந்த நிலையில், பற்றாக்குறையைப் போக்க குஜராத் மாநிலத்திலிருந்து முருங்கை காய் வரவழைக்கப்பட்டு கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக சந்தைக்கு முருங்கை காய் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சரிவடைந்து கிலோ ரூ.43-க்கு விற்றது. தற்போது, செடி முருங்கை அறுவடை காலம் என்பதால் சந்தைக்கு வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விலை குறையும் என்று காய்கறி கடை உரிமையாளா் பாலன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com