கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

ஒட்டன்சத்திரத்திலிருந்து கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கைவிடுத்தனா்.

ஒட்டன்சத்திரத்திலிருந்து கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கைவிடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திலிருந்து கொடைக்கானலுக்கு வடகாடு, பாச்சலூா், கே.சி.பட்டி வழியாக தினமும் காலை 6 மணிக்கு ஒரு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இதேப் பேருந்து பகல் 12 மணிக்கு கொடைக்கானலிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு புறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோடைகாலம் தொடக்க உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், ஒட்டன்சத்திரத்திலிருந்து கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com