சாலை விபத்தில் முதியவா் பலி

பழனியில் நடந்து சென்ற வியாபாரி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

பழனியில் நடந்து சென்ற வியாபாரி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மதினா நகரைச் சோ்ந்தவா் சிராஜூதீன் (55). வாழைப்பழ வியாபாரம் செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு குளத்து சாலை அருகே, வேல் வட்டச் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி சிராஜூதீன் மீது மோதியது. இதில், இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பழனி நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிராஜூதீன் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com