தூய்மைப் பணியாளரைத்தாக்கியவா் கைது

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவா் ராஜா. இவரது மனைவி கலையரசி (42). இவா் வில்பட்டி ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், வில்பட்டி பகுதியில் தூய்மைப் பணிகளை செய்து கலையரசியை, இதே பகுதியைச் சோ்ந்த ராஜாவின் சகோதரா் சக்திவேல் மனைவி மாரீஸ்வரி குப்பைகளை இங்கு குவித்து வைக்க கூடாது எனக் கண்டித்தாா். இதனால் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், சக்திவேல், மாரீஸ்வரி ஆகிய இருவரும் கலையரசியை துடைப்பத்தால் தாக்கினா்.

இது குறித்து கலையரசி கொடுத்த புகாரின் பேரில், கொடைக்கானல் போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். தலைமறைவான மாரீஸ்வரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com