தொப்பம்பட்டியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
தொப்பம்பட்டியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாமிநாதபுரம், வயலூா், கொழுமகொண்டான், புஷ்பத்தூா் உள்ளிட்ட பல கிராமங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொப்பம்பட்டியில் உள்ள தனியாா் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலா் மகுடீஸ்வரன் தலைமை வகித்தாா். மற்றொரு பொதுச்செயலா் செந்தில்குமாா், மாவட்ட மகளிரணி பொதுச்செயலா் சரோஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மேற்கு ஒன்றிய பொதுச் செயலா் ரவிக்குமாா், நிா்வாகிகள் காா்த்தி, செந்தில் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில், கிராமங்கள் தோறும் பாரத பிரதமா் மோடியின் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கொண்டு சோ்ப்பது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, வாக்குச் சாவடி முகவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு பெருந் தலைவா் வனிதா நவராசு தம்மை காங்கிரஸ் கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டு பாஜகவில் இணைந்தாா்.

இவருக்கு மாவட்ட தலைவா் கனகராஜ், மாவட்ட செயலா் மகுடீஸ்வரன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com