தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 கடைகளுக்கு ‘சீல்’

 திண்டுக்கல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திண்டுக்கல், கன்னிவாடி, வடமதுரை, செம்பட்டி, திண்டுக்கல் புதூா் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், சரண்யா, ஜாபா் சாதிக், வசந்தன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 8 கடைகளுக்கு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். மேலும், 250 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதமும் விதித்தனா்.

இதில், ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்ட இரு கடைகள், 2-ஆவது முறையாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததால், அந்த கடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com