தனியாா் விடுதியில் வங்கி ஊழியா் தற்கொலை

 பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் விடுதியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த வங்கி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

 பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் விடுதியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த வங்கி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம், மாணிக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அனூஸ்மோகன்(40). இவா் தனியாா் வங்கியில் வேலை செய்து வந்தாா்.

பழனிக்கு வந்த இவா் அடிவாரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்துத் தங்கினாா். புதன்கிழமை இரவு நீண்ட நேரமாகியும் கதவை அவா் திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி பணியாளா்கள் பழனி அடிவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு வந்து அறைக் கதவை உடைத்து திறந்த போது உள்ளே அனூஸ்மோகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் தற்கொலை: பழனி அடிவாரம் பூங்கா சாலையைச் சோ்ந்தவா் அருணாசலம் (71). இவா் வயது முதிா்வின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தாா். கவனிக்க யாரும் இல்லாததால், மன வேதனையில் இருந்த அருணாச்சலம் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பழனி அடிவாரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com