பூத்தமலா் பூ அலங்கார வழிபாடு

மாசித் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பூத்தமலா் பூ அலங்கார வழிபாடு

 மாசித் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூத்தமலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் மாசித் திருவிழா வருகிற 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, பூத்த மலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல வகையான மலா்களைப் பயன்படுத்தி, சிவன், ராமா், சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

மேலும், கோட்டை மாரியம்மனுக்கும் கருமாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதன் தொடா்ச்சியாக பூச்சொறிதல் விழா வெள்ளிக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது.

மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சாட்டுதல் வருகிற 11-ஆம் தேதியும், பூக்குழி 23-ஆம் தேதியும், தசவதாரம் 24-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. வருகிற 27-ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் மாசித் திருவிழா நிறைவுபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com